உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கிடப்பில் தடுப்புச்சுவர் கட்டும் திட்டம்

கிடப்பில் தடுப்புச்சுவர் கட்டும் திட்டம்

பெரியகுளம் : பெரியகுளம் வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு பழமையானது. இங்கு ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் பின்புறம் வராகநதி ஆறு செல்கிறது. பள்ளி சுற்றுப்புறச் சுவர் கடந்த ஆண்டு இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகம் பாதுகாப்பு இன்றி கீழ வடகரை அழகர்சாமிபுரம் பகுதியில் வளர்க்கப்படும் பன்றிகள் பள்ளி வளாகத்தில் சுற்றி திரிகிறது. கடந்தாண்டு வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது இந்தப்பள்ளி வளாகத்தில் வெள்ள நீர் புகுந்தது. சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு அலுவலர்கள் இந்த பகுதியை பார்வையிட்டு வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதற்கு அளவீடு செய்தனர். இது வரை நடவடிக்கை இல்லை. விரைவில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை