மேலும் செய்திகள்
இன்று உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்
20-Nov-2024
பட்டாவழங்க கோரி மனு
30-Oct-2024
பெரியகுளம்: எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியை சுகாதார முன்மாதிரி கிராமமாக மாற்ற கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.பெரியகுளம் தாலுகா பகுதியில் உங்களுடன் உங்கள் ஊரில் முகாமில் கலெக்டர் ஷஜீவனா பங்கேற்றார். தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வேளாண், தோட்டக்கலை துறை அலுவலகம்,வடுகபட்டி கிளை நூலகம் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். பெரியகுளம் ஒன்றிய எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியை சுகாதார முன் மாதிரி கிராமமாக மாற்றுவது குறித்து ஊரக வளர்ச்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை, வேளாண்,தோட்டக்கலை, பொதுப்பணித்துறை, வனத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் கள ஆய்வு குறித்து ஆலோசனை நடத்தினார். பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.தேசிய பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு தொல் பழங்குடியினர் தின விழாவில், கண்ணக்கரை உண்டு உறைவிடப் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டார். அகமலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பணிகள் மேற்கொள்ளவதை ஆய்வு செய்தார். அகமலை, கண்ணக்கரை பகுதியில் பழக்குடியினருக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப், சப்-கலெக்டர் ரஜத்பீடன், தாசில்தார் மருதுபாண்டி உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
20-Nov-2024
30-Oct-2024