உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சீமைக்கருவேல மரங்களை அகற்றி பலன் தரும் மரங்கள் நட திட்டம்

சீமைக்கருவேல மரங்களை அகற்றி பலன் தரும் மரங்கள் நட திட்டம்

போடி: போடி அருகே சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட சூலப்புரம் குதுவல் நிலத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி விட்டு, பலன் தரக்கூடிய 25 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட சூலப்புரத்தில் 200 ஏக்கரில் குதுவல் நிலம் அமைந்து உள்ளன. இதில் சீமைக்கருவேல மரங்களும், பட்டுப் போன வேம்பு மரங்களும் உள்ளன. சீமைக்கருவேல மரங்களை வெட்டி ஏலம் விடவும், ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக ஊராட்சிக்கு பலன் தரக்கூடிய மரங்களை வளர்க்க திட்டமிடப்பட்டு உள்ளன.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 9.40 லட்சம் செலவில் கொட்டை முந்திரி, கருங்காலி, நீர்மருது, சவுக்கு, புளி, வேம்பு, பனை, மகாகனி, வாகை, கொய்யா, நெல்லி, நாவல், பப்பாளி உட்பட 25,000 மரக்கன்றுகளை நடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதற்கான நாற்றுகள் வளர்க்கும் பணி நடந்து வருகிறது.முதல் கட்டமாக குதுவல் நிலத்தில் பலன் தரும் மரங்களை நடுவதற்காக ரூ.1.90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இது போல ராசிங்காபுரம், கோடங்கிபட்டி ஊராட்சி பகுதியிலும் நாற்றுகள் வளர்க்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ