வீடுகள் வழங்க கோரி சப்- கலெக்டர் ஆபீசில் குடியேறும் போராட்டம்
பெரியகுளம் : குறவர் சமுதாய மக்கள் தங்களுக்கு அம்மாபட்டியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை விரைவில் வழங்க வேண்டும் என பெரியகுளம் சப்-கலெக்டர் அலுவலம் வளாகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர்.பெரியகுளம் ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சி,அம்மாபட்டியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 110 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இவை ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது.குறவர் சமூகத்தினருக்கு வழங்கிய பட்டா நிலத்தில் கட்டப்பட்ட குடியிருப்பினை தங்களுக்கே வழங்க வேண்டும். பிறருக்கு வழங்க கூடாது என சப்- கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் சமையல் பாத்திரங்களுடன் குடியேறும் போராட்டம் நடத்தினர். இளவேணி குடியிருப்போர் நலச்சங்கம் தலைவர் உலகநாதன் தலைமை வகித்தார். ' எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை விரைவில் வழங்க வேண்டும்' என வலியுறுத்தினர். இவர்களிடம் பெரியகுளம் தாசில்தார் மருதுபாண்டி பேச்சு வார்த்தை நடத்தினார்.இதனை தொடர்ந்து சப்-கலெக்டர் ரஜத்பீடனிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.