உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

கூடலுார்: ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் சப்ளை செய்ய வலியுறுத்தி கூடலுாரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.ரேஷன் கடைகளில் வினியோகிக்கும் பாமாயிலை தடை செய்து, தேங்காய் எண்ணெய் சப்ளை செய்ய வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கூடலுார் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், செய்தி தொடர்பாளர் மயில்சாமி, கரூர் மாவட்ட தலைவர் பாபுகுட்டி, தேனி மாவட்ட தலைவர் சிவனாண்டி, பாரதிய கிசான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்பாபு, செயலாளர் கர்ணன், முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன், துணைத் தலைவர் ராசா, பொருளாளர் ஜெயபால், நீரினை பயன்படுத்துவோர் சங்க செயலாளர் ஆசைக்காளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் தொடக்க வேளாண் வங்கி மேலாளர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை