உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் போராட்டம் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி 

 கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் போராட்டம் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேட்டி 

தேனி: ''பெரியகுளம் வெங்கடாஜலபதி கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு ஒப்படைக்காவிட்டால் பெரியகுளத்தில் போராட்டம் நடத்தப்படும்.'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தெரிவித்தார். இக்கோயிலை பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியகுளம் தாமரைக்குளம் மலை மீது வெங்கடாஜலபதி கோயில் உள்ளது. 2011 வரை பொது மக்கள் பராமரித்து வந்த இக்கோயிலை ஹிந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியது. இப்போது கோயிலில் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுக்கும் மின் மோட்டார் அறையை பூட்டி விட்டனர். பூஜை நடக்க ஏற்பாடு செய்யவில்லை என்றால் கோயிலை நிர்வகிக்க வேண்டும். தீய சக்திகளிடம் ஹிந்து அறநிலைத்துறை மாட்டி கொண்டு தவிக்கிறது. வெங்கடாஜலபதி கரடு என்பதை கரடு என பதிவேட்டில் திருத்தி உள்ளனர். துணை முதல்வர் சனாதன ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா, கொசு போல் அழிக்க வேண்டும் என்றார். அந்த டெங்கு, மலேரியா கொசுவே இந்த அரசு தான். கோயில் அருகே தர்கா, தனியார் கல்லுாரி உள்ளது. அவர்கள் அரசு வழங்கிய நிலத்தை தவிர கோயில் நிலத்தையும் ஆக்கிரமித்து உள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயிலுக்கு ஒப்படைக்க வேண்டும். ஹிந்து விரோத அறநிலைத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும். இல்லை என்றால் ஹிந்துக்களை திரட்டி பெரியகுளத்தில் போராட்டம் நடத்தப்படும்., என்றார். மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன், ஆன்மிக பிரிவு மாநிலத் தலைவர் சிவப்பிரகாஷம், இப்பிரிவு மாவட்ட நிர்வாகி பொன் தர்மராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி