உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒன்றிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

ஒன்றிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம்

--பெரியகுளம் : பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் முன் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெரியகுளம் ஒன்றியம், 17 ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமையில் ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ.,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கவுன்சிலர் மதன்குமார், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் பங்கேற்றனர். ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு ஏழாவது ஊதிய குழு அரசாணை அடிப்படையில் சம்பள நிலுவைத் தொகை வழங்கிடவும், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெரும் துப்புரவு பணியாளருக்கு ஊதிய நிர்ணயம் செய்து,சம்பளம் நிலுவைத் தொகை வழங்கிடவும், தூய்மை பணியாளர்களுக்கு கூடுதல் வேலைக்கு ஏற்ப சம்பளம் வழங்கிடவும் மாதம் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கிட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 5 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ., சேகரன் பேச்சு வார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்