மேலும் செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு: கலெக்டர் அறிவுறுத்தல்
02-Apr-2025
தேனி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நிதி ஆதரவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சமூக பொறுப்பு நிதியில் இருந்து நிதி பெறப்படுகிறது. இந்த நிதியின் மூலம் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பெற்றோர்களை இழந்த 35 குழந்தைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
02-Apr-2025