மேலும் செய்திகள்
அதிகபட்சமாக சேலத்தில் 72 மி.மீ., மழை பதிவு
19-May-2025
தேனி: மாவட்டத்தில் இரு நாட்களாக மழை தொடர்கிறது.மழைக்கு போடி அருகே ஒரு வீடு சேதமடைந்தது.மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் நேற்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இரு நாட்களாக மேகமூட்டத்துடன் மழை தொடர்கிறது. இதனால் குளிர்ச்சியான சிதோஷ்ண நிலை நிலவுகிறது. ரோடுகளில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றன. தொடர் மழை காரணமாக போடி மெட்டு மேலசொக்கநாதபுரம் யுவராஜ் என்பவரது வீடுபகுதி சேதமடைந்தது. மழையளவு
அதிகபட்சமாக பெரியார் அணை பகுதியில் 55.8 மி.மீ., மழை பதிவானது. ஆண்டிபட்டி 3.8 மி.மீ., அரண்மனைப்புதுார் 8.6 மி.மீ., வீரபாண்டி 6.4 மி.மீ., பெரியகுளம் 4 மி.மீ., சோத்துப்பாறை 13 மி.மீ., வைகை அணை 2.2 மி.மீ., போடி 5.6 மி.மீ., உத்தமபாளையம் 7.2 மி.மீ., கூடலுார் 5.6 மி.மீ., தேக்கடி 36.2 மி.மீ., சண்முகாநதி அணையில் 3.4 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 11.9 மி.மீ., மழை பெய்துள்ளது.
19-May-2025