உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு மீண்டும் 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு அவ்வப்போது அதிகரிப்பதும், பின் குறைப்பதுமாக உள்ளது.பிப். 6ல் 1500 கன அடியாக இருந்த நீர் திறப்பு வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணியில் இருந்து மீண்டும் நீர்திறப்பு வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து 132.35 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). நீர்வரத்து வினாடிக்கு 58 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 5246 மில்லியன் கன அடியாகும். நீர்ப் பிடிப்பில் மழை பதிவாகவில்லை.நீர் திறப்பு அதிகரிப்பால் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் 45 மெகா வாட்டாக இருந்த மின்உற்பத்தி 135 மெகா வாட்டாக அதிகரிக்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை