மேலும் செய்திகள்
முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
19-Sep-2024
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1300 கன அடியாக குறைக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்வதும், பின் குறைவதுமாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு தமிழக பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 1333 கன அடி நீர் வினாடிக்கு 1300 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியான பெரியாறில் 16.8 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 504 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 3380 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 123.80 அடியாக இருந்தது(மொத்த உயரம் 152 அடி). அக்.,15க்கு பிறகு வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் நீர் மட்டம் உயரும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடம் உள்ளது.தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி 117 மெகாவட்டாக குறைந்தது.
19-Sep-2024