உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டி, போடியில் பைபாஸ் அமைக்க அறிக்கை தயாரிப்பு

ஆண்டிபட்டி, போடியில் பைபாஸ் அமைக்க அறிக்கை தயாரிப்பு

தேனி : தேனி மாவட்டம் வழியாக கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலை உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி போடி நகர்பகுதிகள் வழியாக செல்கிறது. ரோட்டோர ஆக்கிரமிப்புகள், அதிகளவிலான உள்ளூர் வாகன பயன்பாட்டால் நகர்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. நகர்பகுதிகளில் மட்டும் பைபாஸ் அமைக்க முதற்கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:போக்குவரத்து நெரிசலை குறைக்க உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, போடி நகர்பகுதிகளில் பைபாஸ் அமைக்க ஆய்வு முடிந்துள்ளது. பைபாஸ் ரோடுகள் நகர்பகுதிக்குள் செல்லாமல் புறநகர் பகுதி வழியாக செல்லும் வகையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம். அனுமதி கிடைத்ததும் அடுத்த கட்ட பணிகள் துவங்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை