உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவிகளை பின் தொடர்ந்து ரோமியோக்கள் அட்டகாசம்

மாணவிகளை பின் தொடர்ந்து ரோமியோக்கள் அட்டகாசம்

போடி: ''போடி பஸ் ஸ்டாண்டில் பள்ளி செல்லும் மாணவிகளை பின் தொடரும் ரோமியோக்கள் அட்டகாசம் செய்து வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் போடி அருகே உள்ள பல கிராமங்களை சேர்ந்த மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு வரவும், வீட்டிற்கு செல்லவும் தினமும் போடி பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல வேண்டும். பஸ்சிற்காக கிராமத்தில் இருந்து வரும் மாணவிகள் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் ரோமியோக்கள் டூவீலர்களில் பின் தொடர்வதும், மாணவிகளிடம் சைகை செய்வதும் தொடர்கிறது. மேலும் பி.ஹைச்., ரோடு, குப்பிநாயக்கன்பட்டி, வினோபாஜி காலனி, கருப்பசாமி கோயில் ரோடு பகுதிகளில் கூட்டமாக நின்று மாணவிகளை கிண்டல் செய்வது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். அடிக்கடி நடக்கும் சம்பவத்தால் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட காலை, மாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, ரோமியோக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை