உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் எனக் கூறி ரூ.10.7 லட்சம் மோசடி

 பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டலாம் எனக் கூறி ரூ.10.7 லட்சம் மோசடி

தேனி: தேனி அல்லிநகரம் பாண்டியன் நகர் பகவதியம்மன் கோயில் தெரு குப்புச்சாமி 38. இவரது வாட்ஸ்ஆப் செயலியில் வர்த்த ஆராய்ச்சியாளர் என 96018 02322 என்ற அலைபேசி எண் மூலம் ஒரு பெண் தொடர்பு கொண்டார். அவர் ரிலையன்ஸ் கேப்பிட்டல் மூலம் பங்கு சந்தையில் அதிக வருவாய் ஈட்ட பயிற்சி வழங்குகிறோம் என தெரிவித்துள்ளார். பின் அப்பெண், ஸ்ரீதர் என்பவரை, குப்புச்சாமியிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் ஸ்ரீதர், குப்புச்சாமியிடம், பங்கு வர்த்தகத்தில் லாபம் ஈட்டுவதற்காக ஒரு ஆப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தினார். அதனை பதிவிறக்கம் செய்தகுப்புச்சாமியின் அலைபேசி எண் ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் இணைக்கப்பட்டு, பங்கு வர்த்தகம் செய்ய ஆரம்பித்தார். அதில் ஸ்ரீதர் அறிவுறுத்திய வங்கி கணக்குகளில் குப்புச்சாமி, 10 லட்சத்து 7035 ரூபாயை செலுத்தினார். பின் அந்த வாட்ஸ் ஆப் குழுவில் பங்கு வர்த்தகம் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், எஸ்.ஐ.,தாமரைக்கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிந்து மோசடி செய்து இணைய வழி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை