உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  முந்திரி சாகுபடி செய்ய ரூ.18 ஆயிரம் மானியம்

 முந்திரி சாகுபடி செய்ய ரூ.18 ஆயிரம் மானியம்

தேனி: புதிதாக முந்திரி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான விதை, இடு பொருட்கள் வழங்க உள்ளதாக தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர். மாவட்டத்தில் ஆண்டிபட்டியில் 650 எக்டேர், கடமலைக்குண்டு மயிலாடும்பாறையில் 1100 எக்டேர், கம்பத்தில் 600 எக்டேர், உத்தமபாளையத்தில் 150 எக்ேடர் என மொத்தம் 2600 எக்டேர் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசு திட்டத்தில் 40 எக்டேர் பரப்பு முந்திரி சாகுபடி விரிவிவாக்கம் செய்ய தோட்டக்கலைத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு எக்டேருக்கு ரூ.18 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் ரூ.8 ஆயிரத்திற்கு கன்றுகள், ரூ.10ஆயிரத்திற்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சம் 2 எக்டேருக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே முந்திரி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பராமரிப்பு மானியம், மல்சிங் சீட்' வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்கள், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி விவசாயிகள் பயன்பெறலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ