| ADDED : ஜன 12, 2024 06:37 AM
தேனி : தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ரூ.4 லட்சம் மோசடி செய்த ஆண்டிபட்டி சக்கம்பட்டி தங்கராசு, அவரது தந்தை கணேசன், தாய் முனியம்மாள், மூத்த சகோதரர் ராஜா உட்பட நால்வர் மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.சக்கம்பட்டி வைகை ரோடு வேலமுருகன் 32. இவரது மனைவி மீனாட்சி 29. இதேப் பகுதியில் சக்கம்பட்டி தங்கராசு வசித்தார். இவர் மீனாட்சிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதனை நம்பிய வேல்முருகன், தங்கராசுவின் வங்கிக்கணக்கில் ரூ.4 லட்சம் செலுத்தினார்.நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தரவில்லை. அலைபேசியில் அழைத்தாலும் அழைப்பை துண்டித்துள்ளார்.இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் தங்கராசுவின் தாய் வீட்டிற்கு சென்று கேட்டனர். அதற்கு தங்கராசுவின் மூத்த சகோதரர் ராஜா, தந்தை கணேசன், தாய் முனியம்மாள் ஆகிய மூவரும் இணைந்து கொலை மிரட்டல் விடுத்து, நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட இருவரும் தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ்டோங்கரேவிடம் புகார் அளித்தனர். எஸ்.பி., உத்தரவில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., சுமதி, தங்கராசு, அவரின் பெற்றோர், சகோதரர் உட்பட நால்வர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.