உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தடுப்பணைகளை சேதப்படுத்தி ஓடையில் மணல் திருட்டு

தடுப்பணைகளை சேதப்படுத்தி ஓடையில் மணல் திருட்டு

போடி: போடி அருகே நாகலாபுரம் மல்லிங்கர்சாமி கரடு நீர்வரத்து ஓடையில் மழை நீர் தடுப்பணைகளை சேதப்படுத்தி மணல் திருடி வருவதால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. போடி ஒன்றியம், நாகலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லிங்கர்சாமி கரடு ஓடை. தொடர் மழை, 18 ம் கால்வாய் நீர் திறந்து விடும் நிலையில் மல்லிங்கர்சாமி கரடு ஓடையில் நீர் வரத்து ஏற்படும். இதன் மூலம் ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடைந்து வந்தன. தற்போது நாகலாபுரம் மல்லிங்கர்சாமி கரடு ஒட்டி உள்ள ஓடை பகுதியின் இருபுறமும் தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். ஓடை பகுதியில் கட்டப்பட்டு உள்ள மழை நீர் தடுப்புகளை உடைத்து மணல் திருடி வருகின்றனர். இதனால் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலையில் ஏற்படுகிறது. நிலங்களில் தண்ணீர் தேக்க, கிணறுகளில் நீர்மட்டம் உயர்த்த முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். தொடர் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை இல்லை. விவசாயிகள் பயன் பெறும் வகையில் மல்லிங்கர்சாமி கரடு பகுதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர் தடுப்புகளை சீரமைத்து மணல் திருட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ