|  ADDED : மார் 15, 2024 06:39 AM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சியில்  மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த மார்ச் முதல்  இந்த ஆண்டு மார்ச் வரை ஆண்டுக்கு ரூ.1.85 கோடி   ஒப்பந்தத்தில் 93 தூய்மை பணியாளர்களை நியமித்து பணி செய்யவும். இவர்களுக்கு நாள்ஒன்றுக்கு  ரூ.609 வீதம் சம்பளம் வழங்கவும், தொழிலாளர் வைப்பு நிதி,இ.பி.எப்., செலுத்த வேண்டும். ஆனால் இதுவரை கணக்குகள் துவங்கவில்லை. மேலும்  63துப்புரவு பணியாளர்களுடன் பணி செய்தார்.இதனால் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தது.சம்பளம் ரூ.400  மட்டுமே வழங்குவதாகவும், உரியநாளில் சம்பளம்,  சீருடை, கையுறை, சாக்கடை தூய்மை பணிக்கு உபகரணங்கள் எதுவும் வழங்கவில்லை என கூறி தற்காலிக பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பணியாளர்கள்   கவுன்சிலர்களிடம்  முறையிட்டனர். இதனை தொடர்ந்து  தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய  கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தனர் தூய்மை பணியாளரிடம் கமிஷனர் பேச்சு வார்த்தை நடத்தினார். பணியாளர்களுக்கு ஒப்பந்ததில் தெரிவித்தபடி உரிய வசதிகளை செய்திட கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.