உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வன அதிகாரியை கத்தியை காட்டி மிரட்டியவருக்கு ஆறு மாதம் சிறை

வன அதிகாரியை கத்தியை காட்டி மிரட்டியவருக்கு ஆறு மாதம் சிறை

மூணாறு: மாங்குளம் ஆனக்குளத்தில் வனத்துறை அதிகாரியை கத்தியை காட்டி மிரட்டியவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தேவிகுளம் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.மூணாறு அருகே மாங்குளம் ஆனக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வின்ட் டென்சாக்கோ. இவர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். இந்நிலையில் 2021ல் ஆனக்குளம் பகுதியில் காட்டு யானைகளை துன்புறுத்தியதாக வின்ட்டென்சாக்கோ மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதனால் ஆத்திரமடைந்தவர் மாங்குளம் வனத்துறை அதிகாரியை கத்தியை காட்டி மிரட்டினார். இந்த வழக்கு தேவிகுளம் குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண்மைக்கிள், வின்ட்டென்சாக்கோவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை