உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குழாய் உடைந்து வீணாகும் சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர்

பெரியகுளம்,: வடுகபட்டியில் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் குழாய் மீண்டும் இரு இடங்களில் உடைந்து குடிநீர் சாக்கடையில் கலந்து வீணாகிறது.பெரியகுளம் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து வடுகபட்டி, மேல்மங்கலம்,ஜெயமங்கலம், சில்வார்பட்டி ஊராட்சிகளுக்கு தினமும் பேரூராட்சிக்கு 3 லட்சம் லிட்டரும், ஊராட்சிகளுக்கு தலா 2 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்க வேண்டும். ஆனால் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தினமும் 50 ஆயிரம் லிட்டர் வழங்குவதற்கே குடிநீர் வாரியம் திணறுகிறது. இதனால் ஜெயமங்கலம் ஊராட்சியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.சாக்கடையில் கலக்கும் குடிநீர்: வடுகபட்டியிலிருந்து மேல்மங்கலம் செல்லும் ரோடு பழைய சினிமா தியேட்டர் பஸ்ஸ்டாப் அருகே இடதுபுறம் கடந்த மாதம் கடைசியில் சோத்துப்பாறை கூட்டு குடிநீர் குழாய் உடைந்து, சாக்கடையில் கலந்தது. தினமலர் செய்தி எதிரொலியாக புதிய இரும்பு குழாய் இணைத்து குடிநீர் வாரியம் சீரமைத்தது. தற்போது சரிசெய்யப்பட்ட குழாய் மேற்புறம் நான்கு அடி இடைவெளியில் இரு இடங்களில் குழாய் உடைந்து, குடிநீர் சாக்கடையில் கலந்தும், பஸ்ஸ்டாப் முழுவதும் பயணிகள் நிற்கும் இடம் முழுவதும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. குடிநீர் வாரியம் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை