உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்

நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்

ஆண்டிபட்டி : ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி தனியார் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தார். தேனி எம்.பி., தங்க தமிழ்செல்வன், எம்.எல்.ஏ.,க்கள் மகாராஜன், சரவணகுமார் முன்னிலை வகித்தனர். முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு, பெண்கள் நல மருத்துவம், ரத்தப் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, குழந்தைகள் நலம், இதயம், நரம்பியல் மருத்துவம் உட்பட 17 வகையான துறை சிறப்பு டாக்டர்கள் மூலம் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. முகாமில் 1316 பயனாளிகள் பங்கேற்று மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் பெற்றனர். முகாம் மேடையில் 10 கர்ப்பிணி பெண்களுக்கும் தொடர்ந்து 290 கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசித்ரா, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் அன்புசெழியன், மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா, கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை