மேலும் செய்திகள்
சிறப்பு பள்ளி மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம்
21-Nov-2024
தேனி; தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில்,மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட தடகளப் போட்டிகள் நடந்தன. கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் காமாட்சி முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் இயங்கிவரும் 15 சிறப்பு பள்ளிகள், கல்வித்துறையில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் என 350க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் நீளம் தாண்டுதல், குண்டு, தட்டு எறிதல், ஓட்டப்போட்டி,வீல்சேர் ஓட்டப்போட்டிகள் நடந்தன. போட்டிகளில் சிறப்பு பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் 50பேர் நடுவர்களாக பணியாற்றினர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிச.3ல் நடக்க உள்ள உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலெக்டர் சார்பில் பரிசு வழங்கப்படும்.
21-Nov-2024