உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முன்விரோதத்தால் கத்திக்குத்து

முன்விரோதத்தால் கத்திக்குத்து

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை காந்திநகரைச் சேர்ந்தவர் குணசேகரன் 35. ஆட்டோ டிரைவராக உள்ளார். 8 மாதங்களுக்கு முன் இவரது ஆட்டோவை கீழ வடகரை ஸ்டேட் பாங்க் காலனி தெருவைச் சேர்ந்த ராஜசேகரன் 40. சேதப்படுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. ராஜசேகரனிடம், தனது குடும்பம் வறுமையில் உள்ளது ஆட்டோவை சரிசெய்து தருமாறு குணசேகரன் கேட்டுள்ளார். இதற்கு ராஜசேகரன் மறுத்து குணசேகரனை அவதூறாக பேசி கத்தியால் குத்தினார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு குணசேகரன் சேர்க்கப்பட்டார். வடகரை போலீசார் ராஜசேகரனை தேடி வருகின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ