உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆசிரியர் மாற்றுப் பணிக்கு செல்ல எதிர்ப்பு: மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் மாற்றுப் பணிக்கு செல்ல எதிர்ப்பு: மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் முருகவேல் என்பவரை மாற்றுப் பணிக்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்களுடன் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.டி.கள்ளிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 179 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 10ஆண்டுகளுக்கு மேலாக 6, 9, 10 ம் வகுப்புகளுக்கு ஆங்கில பாட ஆசிரியராக முருகவேல் 47, உள்ளார். டிச.16ல் வருஷநாடு அருகே குமணன்தொழு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முருகவேல் மாற்றுப்பணிக்கு, மாறுதல் செய்து தேனி சி.இ.ஓ.,இந்திராணி உத்தரவிட்டார். இப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்களுக்கு எளிமையாக ஆங்கிலம் கற்றுத்தரும் ஆசிரியர் முருகவேலை மாற்றுப்பணிக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, பெற்றோர்களுடன் பள்ளி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிற ஆசிரியர்கள் மாணவர்களை சமாதானப்படுத்தி, வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராமலட்சுமி கூறுகையில்: ஆசிரியர் முருகவேலை மாற்றக்கூடாது என மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கிராமப்புற பள்ளி மாணவர்கள் நலன் கருதி ஆசிரியரை மீண்டும் இதே பள்ளியில் பணி தொடர கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தலைமை ஆசிரியை சண்முகக்கனி கூறுகையில், 'சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு மாற்றும்பணி குறித்து கடிதம் வழங்கப்பட்டது. அவர் வாங்க மறுத்து விட்டார்', என்றார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ