உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது குடிக்க பணம் தராததால் தற்கொலை

மது குடிக்க பணம் தராததால் தற்கொலை

சின்னமனூர் : எரசக்கநாயக்கனூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ராசு 70, இவரது மனைவி லட்சுமி 52, ராசு வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளார். தினமும் வேலைக்கு சென்று வரும் மனைவியின் சம்பளத்தை மது குடிக்க கேட்பது வழக்கம் . பணம் தராவிட்டால் விஷம் குடிப்பேன் என மிரட்டுவார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு வெளியில் அமர்ந்து வாந்தி எடுத்துள்ளார். மனைவி கேட்டதற்கு விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சின்னமனூர் எஸ்.ஐ. அருண் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ