உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டீக்கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் மோசடி

டீக்கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் மோசடி

பெரியகுளம்:தேனிமாவட்டம் பெரியகுளம் டீக்கடைக்காரர் முனியாண்டி வங்கி ஏ.டி.எம்., கார்டை மாற்றி தந்து அவரது கணக்கில் ரூ.ஒரு லட்சம் திருடிய மர்மநபரை வடகரை போலீசார் தேடுகின்றனர்.பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி 45. டிச. 6ல் அங்கு திண்டுக்கல் ரோடு இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மிஷினில் பணம் எடுக்க சென்றார். கார்டை செலுத்தி பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த ஒருவரிடம் ஏ.டி.எம்.,கார்டை கொடுத்து ரூ.ஆயிரம் எடுத்து தருமாறு தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மர்ம நபர் ரூ.ஆயிரத்தை எடுத்து கொடுத்துவிட்டு, முனியாண்டியின் ஏ.டி.எம்., கார்டை கொடுக்காமல் செல்லாத வேறொரு கார்டை கொடுத்துவிட்டு தப்பினார். இது தெரியாமல் முனியாண்டி வீட்டிற்கு சென்றார்.இந்நிலையில் முனியாண்டி கார்டை வைத்து மர்மநபர் பல தவணையில் ரூ.ஒரு லட்சம் எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து முனியாண்டி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். அவரிடம் இருந்த கார்டு செயலிழந்தது தெரிய வந்தது. இது குறித்து வங்கி பணியாளர்களிடம் கேட்டபோது, அது முனியாண்டி கார்டு இல்லை என்றனர். மேலும் அவரது கணக்கில் ரூ.1 லட்சத்தை மர்மநபர் எடுத்து நுாதனமாக மோசடி செய்ததையும் தெரிவித்தனர். வங்கியின் வெளியே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் ஆய்வு செய்து விசாரிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ