| ADDED : செப் 30, 2011 01:30 AM
தேவாரம் : பண்ணைப்புரம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு, தே.மு.தி.க., சார்பில் சுருளிராஜ் போட்டியிடுவதாக, கட்சி தலைமை அறிவித்தது. இவரது தந்தை சுப்ரமணி அ.தி.மு.க., சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தந்தையை எதிர்த்து மகனை எப்படி நிறுத்துவதென்று கட்சியின் லோக்கல் நிர்வாகிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வுடன், தே.மு.தி.க., தலைமை கூட்டணி உடன்பாடு ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு பண்ணைப்புரம் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்காத நிலையில், இரு கட்சியை சேர்ந்தவர்கள் சுருளிவேலுவை வேட்பாளராக நிறுத்த இரு தரப்பினரும் ஒத்துக்கொண்டனர். இரு கட்சி உள்ளூர் நிர்வாகிகள் தலைமையில், சுருளிவேலு வேட்புமனு தாக்கல் செய்தார். தே.மு.தி.க., நகர செயலாளர் குமார் கூறுகையில், 'தே.மு.தி.க., அதிகாரபூர்வ வேட்பாளர் சுருளிராஜின் தந்தைக்கு அ.தி. மு.க., சீட் ஒதுக்கியது. தந்தையை எதிர்த்து மகன் போட்டியிட விரும்பவில்லை. வேறு வேட்பாளரை தேர்வு செய்ய முடியவில்லை. எனவே மார்க்சிஸ்ட் வேட்பாளரை இருதரப்பினரும் ஏகமனதாக தேர்வு செய்துள்ளோம்,' என்றார்.