உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலை இலக்கிய போட்டிகள்

கலை இலக்கிய போட்டிகள்

கம்பம் : கம்பம் பாரதி தமிழ் இலக்கிய பேரவை சார்பில் பேச்சு, பாடல், ஓவியப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டில் ஆகஸ்ட் 8 ல் நடக்கிறது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் போட்டிகளில் பங்கேற்கலாம். பேச்சு போட்டிகளில், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'பாரதியும் தமிழும்', 9,10 வகுப்பு மாணவர்களுக்கு 'இமயமும் குமரியும்', 11,12 ம் வகுப்பினருக்கு 'வெற்றி நடைபோடும் இந்தியா', என்ற தலைப்புகளில் நடக்கிறது. 'பாரதியும் தாகூரும்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு, நடக்கிறது. இசைப் போட்டிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு, 9 முதல் 12 ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். ஓவியப்போட்டிகள், கவிதை போட்டிகள், நாட்டுப்புற நடனப் போட்டிகள் நடைபெறும். திரைப்படப்பாடல்கள் அனுமதிக்கப்படமாட்டது. ஆகஸ்ட் 6 க்குள் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பட்டியலை பள்ளிகள் அனுப்ப வேண்டும். இது தொடர்பான விளக்கங்களுக்கு தலைவர், பாரதி தமிழ் இலக்கிய பேரவை, கம்பம் என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பலாம், என, பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை