உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒட்டான்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை

ஒட்டான்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்ற விவசாயிகள் கோரிக்கை

கூடலூர் : கூடலூர் ஒட்டான்குளம் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார பொதுப்பணித்துறையினர் முன்வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் ஒட்டான்குளம் கண்மாயை நம்பி 500 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் விவசாயம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் இருந்து, இக்கண்மாய்க்கு நீர்வரத்து இருக்கும். நீர்வரத்துப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் இக்கண்மாய்க்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டு, இதனை நம்பியிருந்து 500 ஏக்கர் பாசனப்பகுதியில் நெல் நடவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மண்சரிவை சரி செய்து இக்கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட இன்னும் 5 மாதங்களுக்கு மேல் ஆகும். ஒட்டான்குளம் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகியிருந்ததாலும், பல ஆண்டுகளாக தூர் வாராமல் இருந்ததாலும் நீர் இருப்பு மிகக் குறைவாகவே இருந்தது. இக்கண்மாயை நம்பியுள்ள விவசாயம் நிறுத்தப்பட்டுள்ளது. கண்மாயை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார பொதுப்பணித்துறையினர் முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ