உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / குன்னூர் ஆற்றில் செக்டேம் குடிநீர் சப்ளை பாதிப்பிற்கு தீர்வு

குன்னூர் ஆற்றில் செக்டேம் குடிநீர் சப்ளை பாதிப்பிற்கு தீர்வு

ஆண்டிபட்டி : கூட்டு குடிநீர் திட்ட உறை கிணறுகளில் நீர் சுரப்பை சமன் செய்ய குன்னூர் பகுதியில் செக்டம் அமைக்க வேண்டும். தேனி, ஆண்டிபட்டி பகுதிகளுக்கு குன்னூர் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளையாகிறது. இதற்காக ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து அதில் கிடைக்கும் நீர் பம்ப் செய்யப்படுகிறது. அனைத்து உறை கிணறுகளும் குன்னூர் பகுதியில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ளன. வறண்ட காலங்களில் உறை கிணறுகளில் நீர் சுரப்பதில்லை. இதனால் குடிநீர் சப்ளை பாதிப்படைகிறது. அதிகமாக வெள்ளம் வரும் நேரத்தில் உறை கிணறுகள் மூழ்கடிக்கப்பட்டு சேதம் அடைகிறது. இதனாலும் சப்ளை பாதிப்படைகிறது. இதனை தடுக்க ஆற்றில் குடிநீர் உறை கிணறுகள் உள்ள இடங்களில் செக்டம் அமைக்க வேண்டும். ஆறுகள் வறண்டால் செக்டம் பகுதியில் தேங்கும் நீரால், சுரப்பு சமன் செய்யப்படும்.வெள்ளம் வந்தாலும் உறை கிணறுகளில் அரிமானம் தடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். பி.டி.ஓ., கலைச்செல்வராஜன் கூறுகையில்,' குன்னூர் பகுதி ஆற்றில் செக்டம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் குடிநீர் அதிகாரிகளின் ஆலோசனை பெறப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை