| ADDED : ஆக 11, 2011 11:17 PM
கம்பம் : சுருளி அருவியில், போலீஸ் பாதுகாப்பில் தொடர்ந்து மெத்தன போக்கே காணப்படுகிறது. சுருளியில் காதல் ஜோடி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, போலீஸ் மற்றும் வனத்துறை உஷாராகி உள்ளது. கண்காணிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் பெண்கள் குளிக்கும் இடத்தில் ஈவ்டீசிங் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிக்கின்றனர். மற்ற நாட்களில் போலீசார் அருவி பகுதிக்கு செல்வது இல்லை. இதனால் ரோமியோக்களின் அட்டகாசம் தொடர்கிறது. பெண்கள் குளிக்கும் இடத்தில் ஈவ்டீசிங் அதிக அளவில் நடைபெறுவதாக புகார்கள் உள்ளன. போலீசார் பாதுகாப்பில் மெத்தனம் காட்டாமல், சனி, ஞாயிறு உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும், கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் சுற்றுலா பயணிகள் அச்சமின்றி அருவிக்கு குளிக்க வருவார்கள்.