உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறப்பு திட்ட செயலாக்கம் கலெக்டர் ஆலோசனை

சிறப்பு திட்ட செயலாக்கம் கலெக்டர் ஆலோசனை

தேனி : மாவட்டத்தில் அரசின் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். முதல்வர் அறிவித்தபடி தாலிக்கு தங்கம் வழங்க தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் பெறல், முதுநிலை வரிசைப்படி நிதி உதவி வழங்குவது, லேப்டாப் வழங்க, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இலவச பொருட்களை பாதுகாப்பாக வழங்க தாலுகா அளவிலான அரசு கட்டடத்தை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை தரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ