உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காற்றாலை மின் உற்பத்தியில் முந்துகிறது தேனி மாவட்டம்

காற்றாலை மின் உற்பத்தியில் முந்துகிறது தேனி மாவட்டம்

கம்பம் : காற்றாலை மின் உற்பத்தியில், தேனி மாவட்டம் முதல் இடத்தை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 14 ஆயிரத்து 723 மெகாவாட் மின்சாரம், காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தமிழகத்தின் பங்கு 42 சதவீதம்.பொள்ளாச்சி, உடுமலை, கோவை, திருநெல்வேலி,கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் காற்றாலை மின் உற்பத்தி நடக்கிறது. தேனி மாவட்டத்தில் சமீப காலமாக, அதிகளவில் காற்றாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. 400 மெகாவாட் மின்சாரம் தற்போது இங்கு உற்பத்தியாகிறது. அடுத்த ஆண்டில் 700 மெகாவாட் ஆக இது உயரும். இதன் மூலம் காற்றாலை மின் உற்பத்தியில், தேனி மாவட்டம் முதல் இடம் பெறும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை