உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேவிகுளம் சுங்கச்சாவடிக்கு விதித்த தடை உத்தரவு வாபஸ்

தேவிகுளம் சுங்கச்சாவடிக்கு விதித்த தடை உத்தரவு வாபஸ்

மூணாறு: தேவிகுளம் அருகே உள்ள சுங்கச் சாவடிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம் அருகே சுங்கச்சாவடி கடந்தாண்டு அக். 4ல் பயன்பாட்டுக்கு வந்தது. சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் செல்லும் பாதையில் பல்வேறு இடையூறுகள் உள்ளதாக கூறி, அவற்றை சரி செய்வதற்கு வசதியாக சுங்கச்சாவடி செயல்பட தற்காலிகமாக தடை விதித்து தேவிகுளம் சப் கலெக்டர் ஜெயகிருஷ்ணன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உட்பட அவசர வாகனங்கள் செல்லும் பாதையில் இடையூறுகளை தடுக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வேறு எவ்வித தடங்கலும் இல்லை என நிறுவனம் தெரிவித்ததால் தற்காலிக தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை