உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மக்களை தேடி முதல்வர், ஜமாபந்தியில் மனு வழங்கியும் தீர்வு காணவில்லை பட்டா மாறுதலுக்கு மனு செய்தவர் புலம்பல்

மக்களை தேடி முதல்வர், ஜமாபந்தியில் மனு வழங்கியும் தீர்வு காணவில்லை பட்டா மாறுதலுக்கு மனு செய்தவர் புலம்பல்

கம்பம் : பட்டா மாறுதல் கோரி மக்களை தேடி முதல்வர், ஜமாபந்தி ஆகியவற்றில் வழங்கிய மனு மீது நடவடிக்கை இன்றி கிடப்பில் உள்ளதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.கப்பம் 5 வது வார்டு நேருஜி தெருவில் வசிக்கும் முருகன் என்பவர், தனது தந்தை பெயரில் உள்ள வீட்டு பட்டாவை தனது பெயருக்கு மாற்றி வழங்க கோரி 6 மாதங்களுக்கு முன் கம்பத்தில் நடந்த மக்களை தேடி முதல்வர் திட்டத்தில் மனு அளித்தார். இம் மனு மீது நடவடிக்கை இல்லை. பின் ஜூலை 2 ல் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்த ஜமாபந்தியில் அதே மனுவை திரும்ப வழங்கினார். அதற்கும் தீர்வு இல்லை. வேறு வழியின்றி கடந்த வாரம் வருவாய் நிர்வாக ஆணையர் அமுதா அவர்களுக்கு மெயிலில் புகார் அனுப்பியுள்ளார் . உடனே வருவாய் துறையினர் வந்து விசாரித்துள்ளனர். ஆனால் அதன் பின்னும் நடவடிக்கை இல்லை.இதே போல் நூற்றுக்கணக்கான மனுக்கள் மீது நடவடிக்கை இன்றி நிலுவையில் உள்ளதாக மக்கள் புலம்புகின்றனர்.இது குறித்து முருகன் கூறுகையில், பட்டா மாறுதலுக்காக ஆறு மாதங்களாக ஆர்.டி.ஒ. கலெக்டர் , வருவாய் நிர்வாக ஆணையர் வரை மனு கொடுத்து விட்டேன். இதுவரை பிரச்னை தீரவில்லை. என்னைப் போன்று பலரும் மனு கொடுத்து விட்டு பதில் வரும் என காத்திருக்கின்றனர் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை