மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
17 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
17 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
20 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
20 hour(s) ago
தேனி:துப்பாக்கிசூட்டில் தோட்டக்காவலாளி பலியான சம்பவத்தில் வனவர், வனக்காவலர் ஜாமின் மனுவை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தேனி மாவட்டம் கூடலுார் வனப்பகுதியில் அக்., 28 ல் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் குள்ளப்பக்கவுண்டன்பட்டியை சேர்ந்த தோட்ட காவலாளி ஈஸ்வரன் 55, உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். வனப்பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனக்காவலர் ஜார்ஜ்குட்டியை, ஈஸ்வரன் கத்தியால் குத்த முயன்றதாகவும், அதை தடுக்க வனவர் திருமுருகன் துப்பாக்கியால் சுட்டதில் ஈஸ்வரன் இறந்து விட்டதாக வனத்துறை தெரிவித்தது.குமுளி லோயர்கேம்ப் போலீசார் விசாரித்தனர். பின் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, வனவர் திருமுருகன், வனக்காவலர் ஜார்ஜ்குட்டி பிப்., 29ல் கைது செய்யப்பட்டனர். கைதான 2 பேரும் ஜாமின் வழங்க கோரி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதி அறிவொளி முன் நேற்று விசாரணை நடந்தது.இதில் அரசு தரப்பில், போலீசார் விசாரணையில் கைப்பற்றப்பட்ட 3 தடயவியல் ஆதாரங்கள் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவை கொலை செய்ததற்கான முக்கிய ஆதாரமாக உள்ளதால் இதில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என தெரிவித்ததால் இருவரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
17 hour(s) ago
17 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago