உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரயில்வே மேம்பால பணியால் இருள் சூழ்ந்த தேசிய நெடுஞ்சாலை அலட்சியத்தால் விபத்து, வழிப்பறி அபாயம்

ரயில்வே மேம்பால பணியால் இருள் சூழ்ந்த தேசிய நெடுஞ்சாலை அலட்சியத்தால் விபத்து, வழிப்பறி அபாயம்

தேனி : தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பால பணியால் விளக்குகள் பழுதாகி இருள்சூழ்ந்து காணப்படுகிறது.தேனி நகர்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் ரயில்வே மேமம்பால பணிகள் நடந்து வருகிறது. பணிகள் துவங்கி இரு ஆண்டுகள் ஆகிறது. அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால், பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேம்பால பணியை காரணம் காட்டி மதுரை ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது அரைகுறையாக அமைக்கப்பட்ட ரோட்டினை மக்கள் பயன்பாட்டிற்காக அவசர கதியில் ரோட்டை திறந்துள்ளனர்.மேம்பால பணிகள் நடைபெறும் அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் இருந்து மதுரை ரோட்டில் சிட்கோ அருகே உள்ள தனியார் பள்ளி வரை ரோட்டில் தெருவிளக்கு வசதி இல்லை. இதனால், இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அரண்மனைபுதுார், கொடுவிலார்பட்டி செல்வோர் நடந்து அரண்மனைப்புதுார் விலக்கு வருகின்றனர். இருள் சூழந்துள்ளதால் வழிப்பறி அச்சம் உள்ளது. மேம்பால பணிகள் நடந்து வருவதால் சிதறியுள்ள கற்களில் தடுமாறில் பலர் கிழே விழுந்து காயமடைகின்றனர்.விபத்துக்களை தவிர்க்க அதிகாரிகள் மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் போதிய வெளிச்சம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை