உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஓட்டுப்பதிவு முடிந்து மறுநாள் வந்த ஓட்டுப்பதிவு இயந்திரம்

 ஓட்டுப்பதிவு முடிந்து மறுநாள் வந்த ஓட்டுப்பதிவு இயந்திரம்

மூணாறு: ஓட்டு பதிவு முடிந்து 24 மணி நேரத்திற்கு பிறகு மின்னணு இயந்திரம் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வந்து சேர்ந்தது. மூணாறு அருகில் உள்ள இடமலைகுடி ஊராட்சி அடர்ந்த வனத்தினுள் உள்ளது. அங்கு மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அப்பகுதிக்கு செல்ல ரோடு வசதி சரி வர இல்லை என்பதால், குறிப்பிட்ட பகுதி வரை ஜீப்புகளில் சென்று, அதன் பிறகு பல கிராமங்களுக்கு கரடு, முரடான பாதையில் நடந்து செல்ல வேண்டும். அந்த ஊராட்சியில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதற்கு 14 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அப்பகுதி அடர்ந்த வனம் என்பதால் ஓட்டு பதிவு முடிந்ததும் திரும்ப இயலாது. அதனால் நேற்று காலை புறப்பட்டனர். ராஜமலை, பெட்டிமுடி வழியாக தேர்தல் பணிக்குச் சென்ற 13 வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த அதிகாரிகள், அதே வழியில் திரும்பினர். மாலை 4:00 மணி வரை ஓட்டு பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான மூணாறு அரசு தொழில் பயிற்சி மேல்நிலை பள்ளிக்கு வந்து சேர்ந்தன. தமிழகம் வால்பாறை அருகே வனத்தினுள் உள்ள நூறடிகுடிக்கு, தமிழகம் வழியாக 175 கி.மீ., தூரம் பயணம் செய்து அதிகாரிகள் சென்றனர். அவர்கள் அதே வழியில் திரும்பிய நிலையில் ஓட்டு பதிவு முடிந்து 24 மணி நேரத்திற்கு பிறகு மாலை 6:30 மணிக்கு ஓட்டு பதிவு இயந்திரம் வந்து சேர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை