உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் 3 இடங்களில் திருட்டு

ஆண்டிபட்டியில் 3 இடங்களில் திருட்டு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஒரே நாளில் 3 இடங்களில் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது.க.விலக்கு அருகே கருப்பத்தேவன்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா, கருத்தமலைபட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஜவுளிக்கடை வைத்துள்ளார். பிப்ரவரி 15ல் இரவு இரு கடைகளையும் பூட்டிவிட்டு மறு நாள் காலை வந்து பார்த்தபோது கடையின் கதவுகள் மற்றும் கல்லா பெட்டிகள் உடைக்கப்பட்டு கடைகளில் இருந்த ரூ.8000 பணத்தை யாரோ திருடிச்சென்று விட்டனர். இளையராஜா புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.சக்கம்பட்டி பெத்தணசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், பிப்ரவரி 14 ல் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வெளியூர் சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் திருடுபோய் இருந்தது. ஆறுமுகம் புகாரியில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.ஆண்டிப்பட்டி அருகே சண்முக சுந்தரபுரம் அய்யனார் கோயிலில் இரவில் பூட்டை உடைத்து கோயிலில் இருந்த உண்டியலை திருடி சென்று விட்டனர். கோயில் நிர்வாகி அய்யணன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை