உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இருசக்கர வாகன விபத்து இரண்டு பேர் பலி

இருசக்கர வாகன விபத்து இரண்டு பேர் பலி

பெரியகுளம் : தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தைச் சேர்ந்த பந்தல்காண்ட்ரக்டர் வெங்கிடுசாமி (45). இவரது மகன் விக்னேஷ்வரன் (11). அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வெங்கிடுசாமி, விக்னேஷ்வரனை இருசக்கர வாகனத்தில் (பஜாஜ் பி.ஓய்.கே) ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். எதிரே தேனி கொண்டுராஜா பள்ளி அலுவலர் வெங்கடேஷ்ராஜா (40), இருசக்கர வாகனத்தில் (ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ்) பெரியகுளத்திலிருந்து தேனிக்கு சென்று கொண்டிருந்தார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.மாலை 4.15 மணிக்கு லட்சுமிபுரம் அருகே இரு வாகனங்களும் நேருக்குநேர் மோதியது. வெங்கிடுசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார்.இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் வெங்கடேஷ்ராஜா, விக்னேஸ்வரனை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வெங்கடேஷ்ராஜா இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ