| ADDED : ஆக 22, 2011 12:22 AM
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் தென்னை நார்கழிவை, இயற்கை சுழற்சி மூலம்
பயனுள்ள உரமாக பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.பெரியகுளம்
மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தென்னை சாகுபடி
செய்யபட்டுள்ளது. தேங்காயிலிருந்து எண்ணெய், மட்டையிலிருந்து
கயிறு,தென்னங்கீற்று உட்பட தென்னையின் அனைத்து பாகங்களும் உபயோகமாகிறது.
பெரியகுளம், கள்ளிப்பட்டி, கைலாசபட்டி பகுதியில் மட்டையிலிருந்து கயிறு
தயாரிக்கப்படுகிறது.மீதமாகும் நார் கழிவுகளை வீணாக்குகின்றனர். தீயிட்டு
எரிப்பதால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது.பெரியகுளம் பகுதியில் விவசாயிகள்
சிலர் வீணாகும் நார் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தவும், மண்ணின்
நீர்பிடிப்பு தன்மையை அதிகரிக்கவும் செய்கின்றனர். ஒரு ஹெக்டேர் பரப்பளவில்
உள்ள தென்னையில் இருந்து,1,500 மட்டைகள் வரை கிடைக்கிறது.
இவற்றிலிருந்து ஒரு டன் நார்கழிவுகள் கிடைக்கும். இவற்றில்
சிப்பிக்காளான்களை பயன்படுத்தி சத்துமிக்க இயற்கை உரம் தயாரிக்கலாம், என
விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.