உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் புகார் தெரிவிக்கலாம்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் புகார் தெரிவிக்கலாம்

தேனி:இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாஷ் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் புகார் தெரிவிக்கலாம், என கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு சிம்பு வெடிக்கும் பருவத்தில் உள்ளது. இப்பருவத்தில் மேல் உரம் இடுவதற்காக யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள், தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்க போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.பொட்டாஷ் உரத்தை விவசாய கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், வழங்குவதற்கு போதிய அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 400 டன் பொட்டாஷ் உரம் இறக்குமதி செய்யப்பட்டு தொடக்க விவசாய கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் நிறுவனங்கள் குறித்து 04546-251862 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்,'இவ்வாறு கூறியுள்ளார்.சில்லறை விலையாக மூடை பொட்டாஷ் 425 ரூபாய், டி.ஏ.பி., 696 ரூபாய், யூரியா 268 ரூபாய்க்கு விற்க வேண்டும். அடுத்த வாரம் முதல் தனியார் கடைகளிலும் பொட்டாஷ் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்