உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கதிரப்பன்பட்டியில் மர்மக் காய்ச்சல்

கதிரப்பன்பட்டியில் மர்மக் காய்ச்சல்

தேவதானப்பட்டி:கதிரப்பன்பட்டியில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் ஏற்பட்டுளளது.இக்கிராமத்தை சேர்ந்த பொம்மையன் 37, பொம்மக்காள் 32, பெருமாள் 45, செல்லமணி உட்பட பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர். கதிரப்பன்பட்டியில் தொடர்ந்து காய்ச்சல் வராமல் தடுக்க சுகா தாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ