உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அ.தி.மு.க.,விற்கு ஆதரவு

அ.தி.மு.க.,விற்கு ஆதரவு

பெரியகுளம்:பெரியகுளத்தில் தமிழக கட்டட தொழிலாளர்கள் பொதுநல முன்னேற்ற சங்க மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, மாநில அமைப்பு செயலாளர் கிட்டு முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தன்,செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வை ஆதரிப்பது, கட்டட தொழிலாளர்களுக்கு பென்ஷன் தொகையை ஆயிரமாக உயர்த்திய முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைமை நிலைய செயலாளர் பேச்சியப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை