உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு குவாரி நிறுத்தம்: மணல் கடத்தல் அதிகரிப்பு

அரசு குவாரி நிறுத்தம்: மணல் கடத்தல் அதிகரிப்பு

தேனி:தேனி மாவட்டத்தில் அரசு குவாரி நிறுத்தப்பட்டதால், மணல் கடத்தல் அதிகரித்துள்ளது.ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியில் செயல்பட்டு வந்த மணல் குவாரி சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் மணல் கடத்தல் அதிகரித்துள்ளது. தினமும் 200க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் கடத்தப்படுகிறது.கடத்தல் மணல் பெரும்பாலும் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. வருவாய்த்துறை அதிகாரிகளும், கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி சோதனை சாவடி அதிகாரிகளும் மணல் கடத்தப்படுவதை கண்டு கொள்வதில்லை.இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கலெக்டர் இப்பிரச்னையில் தலையிட்டு, அரசு குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டும்.கண்டமனூர், கோட்டைப்பட்டி, அரண்மனைப்புதூர், அம்மச்சியாபுரம் பகுதியில் அரசு மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கினால் கடத்தல் மணலை தடுத்து விட முடியும்.கலெக்டர் பழனிசாமியிடம் கேட்ட போது, 'தெப்பம்பட்டி குவாரியை திறப்பது தொடர்பாக திங்கள் கிழமை ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. மணல் கடத்தலை தடுக்க வருவாய்த்துறையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தி பிடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ