உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில்  இடம்பெற்ற தேனி விஞ்ஞானி

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில்  இடம்பெற்ற தேனி விஞ்ஞானி

தேனி:அமெரிக்கா ஸ்டேன்போர்டு பல்கலை பேராசிரியர் குழு வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில், தேனி மாவட்டம், ராசிங்காபுரத்தை சேர்ந்த விஞ்ஞானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேற்கத்திய நாடான அமெரிக்காவின், ஸ்டேன்போர்டு பல்கலை சார்பில் 22 துறைகளில் ஆய்வுகள் செய்து வரக்கூடிய உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகள் 2 சதவீதம் பேரை தேர்வு செய்துள்ளனர்.அந்த தேர்வில் இடம் பெற்றுள்ள பல்வேறு துறை சார்ந்து விஞ்ஞானிகள் குறைந்தது ஐந்து ஆய்வு கட்டுரைகள், அது தொடர்பான துணை கட்டுரைகள் சமர்ப்பித்ததன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உலக அளவில் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவில் 3,500 பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில் கணித துறையில் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் தேனி மாவட்டம், ராசிங்காபுரத்தை சேர்ந்த விஞ்ஞானி பிரதாப், 31, கணித ஆய்வுகள் பிரிவில் தேர்வாகி உள்ளார். இவர் தென்கொரியா குன்சன் தேசிய பல்கலையில் காற்று வேக ஆய்விற்காக தேர்வானார்.தற்போது, சீனாவில் சென்சன் பல்கலையில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். உலக அளவில் கணித பிரிவில் 21,237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பிரதாப், 257ம் இடம் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ