உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாநில நீச்சல் போட்டியில் தேனி மாணவர்கள் சாதனை 5 தங்கம், 3 வெள்ளி வென்றனர்

மாநில நீச்சல் போட்டியில் தேனி மாணவர்கள் சாதனை 5 தங்கம், 3 வெள்ளி வென்றனர்

தேனி: சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் தேனி மாவட்ட பள்ளி மாணவர்கள் 5 தங்கம், 3 வெள்ளி வென்று அசத்தினர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார், குடியரசு தின நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் பிப்., 7 முதல் பிப்.,10 வரை நடந்தது. இதில் தேனி மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் நடந்த நீச்சல் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மாணவி நிஷாதமித்ரா 50 மீ., பட்டர்பிளே பிரிவில் தங்கம், 100 மீ., பட்டர்பிளே பிரிவில் வெள்ளி வென்றார். 17 வயதிற்குட்பட்ட பிரிவில் மாணவி யோகசங்கமித்ரா 400 மீ., ப்ரீஸ்டைல், 200 மீ., பட்டர்பிளே உள்ளிட்ட 3 பிரிவுகளில் தங்கம் வென்றார். இதே பிரிவில் மாணவி ஜெமிமா 200 மீ., 50 மீ., பிரஸ்டோக் போட்டிகளில் ஒரு தங்கம், இரு வெள்ளி பதக்கங்கள் வென்றார். 19 வயதிற்குட்பட்ட பிரிவில் 50 மீ., பிரஸ்டோக்கில் மாணவர் அகிலேஷ் குமார் வெண்கலம் வென்றார். பதக்கம் வென்ற மாணவர்களை மாவட்ட பயிற்சியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி