உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி 

புலிகள் கணக்கெடுப்பு பயிற்சி 

தேனி: அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு துவங்க உள்ளதை முன்னிட்டு, ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தின் சார்பில், மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள86 வன அதிகாரிகள், பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு நடைமுறை குறித்தும், கேமராக்கள் பொருத்துதல், மென்பொருள் செயலிகளில் தரவுகளை பதிவேற்றும் திறன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அருண்குமார் துவக்கி வைத்தார். புலிகள் காப்பகத்தின்உயிரியலாளர் கீர்த்திவாசன் கணக்கெடுக்கும் நடைமுறை, சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். புவியியலாளர் கோகுல்பிரசாத் கணக்கெடுப்பின் போது எடுக்கப்பட வேண்டிய பிற விலங்கினங்களின் விபரங்கள், கேமராக்களை பொருத்தும் நடைமுறைகள் குறித்து விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ