மேலும் செய்திகள்
அருப்புக்கோட்டையில் களை கட்டிய ஆட்டுச் சந்தை
29-Oct-2024
ஆண்டிபட்டி: தீபாவளியை முன்னிட்டு தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வாரச்சந்தையில் ஆடுகள் வாங்க நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குவிந்ததால் நேற்று ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.ஆண்டிபட்டியில் திங்கள் தோறும் வாரச்சந்தை கூடுகிறது. இதில் காலை 6:00 முதல் 9:00 மணி வரை நடைபெறும் ஆட்டுச் சந்தையில் நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். இந்த வாரம் (அக்.,31ல்) வியாழக்கிழமை தீபாவளி என்பதால் ஆடுகளுக்கான தேவைகள் அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்காக வார சந்தைக்கு கொண்டு வந்தனர். தேனி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாகனங்களில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்ததுடன் ஆடுகள் வாங்கிச் செல்லவும் பலர் வந்திருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடுகள் விலை எடைக்கு ஏற்ப ரூ.8000 முதல் 20 ஆயிரம் வரையிலான விலையில் இருந்தது.ஆடு வியாபாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வாரத்தில் நடக்க ஆட்டுச்சந்தையில் அதிக எண்ணிக்கையிலான ஆடுகள் விற்பனைக்கு வரும். இந்த ஆண்டும் 1000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. விலை நிர்ணயம் கூடுதலாக இருந்ததால் ஆடுகள் விற்பனையில் வேகம் இல்லை. உள்ளூர் வியாபாரிகள் பலர் ஆடுகள் வளர்க்கப்படும் இடத்திற்கு சென்று முன்கூட்டியே வாங்கிச் சென்றுள்ளனர். வெளியூர் வியாபாரிகளே ஆடுகளை அதிகம் வாங்கி சென்றனர். ஆண்டிபட்டி சந்தையில் நேற்று ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான ஆடுகள் விற்றுள்ளது என்றார்.
29-Oct-2024