உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

தேனி: தேனி ஒன்றியம் ஜங்கால்பட்டியில் வேளாண் துறை சார்பில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது. இப்பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி தலைமை வகித்தார். கோடை உழவு, விதை நேர்த்தி செய்தல், இனக்கவர்ச்சி பொறி அமைத்து அதன் மூலம் அந்துபூச்சி, சாறு உறுஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், பருத்தியில் ஊடுபயிர் பயிரிடுதல், சூரியகாந்தியில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், வரப்பு பயிரிடுதல் உள்ளிட்டவை எடுத்துரைக்கப்பட்டன. சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் மகேஸ்வரன், வேளாண் அலுவலர் சதீஸ் பேசினர். அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் ஜக்கையன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கண்மணி, பாண்டீஸ்வரன் உள்ளிட்டோர் பயிற்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை